search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்கால் துறைமுகம்"

    காரைக்கால் துறைமுகச் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக ரூ.600 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக துறைமுகத்தின் இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் காரைக்கால் துறைமுகம் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது வரை 53 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது.

    1,565 வணிகக் கப்பல்களில் இருந்து கோதுமை, சர்க்கரை, சிமெண்ட், உரப்பொருட்கள், நிலக்கரி, எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துள்ளது. இந்த துறைமுகம் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது.

    இந்தநிலையில் துறைமுகச் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக ரூ.600 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் துறைமுகம் எந்திரமயமாக்கப்படுவதால் தானியங்கி முறையில் மொத்த பொருள்களைத் திறமையாக கையாள முடியும். குறிப்பாக கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் கன்வேயர் மூலமாகச் செயல்படும் தானியங்கி கருவி உதவுகிறது.

    பொருட்கள் எந்தவித சேதாரமும் இன்றி மொத்த சரக்குகளை லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் முடியும். துறைமுகத்தின் செயல்பாடுகளும் வேகமாக நடப்பதுடன், நெரிசல் குறையும். பொருள்களும் விரைவாக இடம் மாறும். காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவலை துறைமுகத்தின் இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி தெரிவித்து உள்ளார். #tamilnews
    ×